‘சீயான் 60’ படப்பிடிப்பில் இணையும் வாணி போஜன்!

‘சீயான் 60’ படப்பிடிப்பில் இணையும் வாணி போஜன்!

நடிகை வாணி போஜன் விரைவில் ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் தனது 60-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘சீயான் 60’ படப்பிடிப்பில் இணையும் வாணி போஜன்!

நடிகை வாணி போஜன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது அவர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைய உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சீயான் 60’ படப்பிடிப்பில் இணையும் வாணி போஜன்!

விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருவதால் அந்தப் படத்தை முடித்த பின்னர்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார். எனவே சீயான் 60 படத்தில் வாணி போஜன் இடம் பெறும் காட்சிகளை மட்டும் படமாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் வாணி போஜன் விக்ரம் பிரபுவுடன் பாயும் ஒளி நீ எனக்கு, சசிகுமார் உடன் பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Share this story