‘தளபதி 65’ படத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்கிறாரா? வெளியானது உண்மை!

‘தளபதி 65’ படத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்கிறாரா? வெளியானது உண்மை!

தளபதி 65 படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகர் வித்யுத் ஜம்வால் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தி விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகை அபர்ணா தாஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

‘தளபதி 65’ படத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்கிறாரா? வெளியானது உண்மை!

விஜய் இந்தப் படத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த உளவுத்துறை பகுதியின் அண்டர்கவர் ஏஜெண்டாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. படத்தில் போஸ்டரில் பல உயர்ரக துப்பாக்கிகள் இடம் பெற்றிருந்தது. எனவே படத்திற்கு மிக வலிமையான வில்லன் கட்டாயம் அவசியம்.

எனேவ பாலிவுட் நடிகர் நடிகர் வித்யுத் ஜம்வால் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசி வந்தன. வித்யுத் ஏற்கனவே ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு மிகவும் டப் கொடுத்த மிரட்டல் வில்லனாக மிரட்டியிருந்தார்.

‘தளபதி 65’ படத்தில் வித்யுத் ஜம்வால் நடிக்கிறாரா? வெளியானது உண்மை!

அவர் மீண்டும் விஜயுடன் சேர்ந்து நடித்தால் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வித்யுத் ஜம்வால் தான் தளபதி 65 படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் அதற்காக காத்திருக்கிறேன். அவருடன் நடிக்க மிகவும் விரும்புகிறேன். ஆனால் நான் தளபதி 65 படத்தில் நடிக்கிறேன் என்பது போலியான தகவல்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story