சினிமா பயணத்தில் 19 ஆண்டுகள் நிறைவு... ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு !

சினிமா பயணத்தில் 19 ஆண்டுகள் நிறைவையொட்டி ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ஸ்பெஷல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. முதல் படமே வெற்றிப்படமாக மாறியதை அடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக மாறின.
இதையடுத்து காதல் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வந்த ஜெயம் ரவி, நிமிர்ந்து நில், தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், அடங்கமறு, பூமி ஆகிய ஆக்ஷன் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகிலன்’ படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் 19 ஆண்டுகள் நிறைவையொட்டி ‘அகிலன்’ படத்தின் மிரட்டும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.