மல்லிகா ஷெராவத் நடிப்பில் ‘பாம்பாட்டம்’.. டிரெய்லரை வெளியிடும் பிரபல நடிகர் !

Pambattam

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் முதல்முறையாக தமிழில் நடித்துள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’. இந்த படத்தில் நாகமதி இளவரசியாக மல்லிகா ஷெராவத் நடித்துள்ளார். வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வரலாற்று பின்னணியை கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. ஹாரர் மற்றும் த்ரில்லர் கதைக்களத்தில் 150 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகிறது. 

Pambattam

இந்த படத்தில் ‘நான் அவன் இல்லை’ ஜீவன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

Pambattam

நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் இருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வரும் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் ஆர்யா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story