தமிழில் டப்பிங் பேசிய தெலுங்கு நடிகர்.. ‘தி வாரியர்’ குறித்து சூப்பர் அப்டேட்

TheWarrior

ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி வாரியர்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழில் ஆக்ஷன் அதிரடிகளுக்கு பிரபலமான லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி வாரியர்’. இந்த படத்தில் தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை சீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

TheWarrior

இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகயும், நடிகர் ஆதி வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாசர், நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

TheWarrior

இப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டப்பிங்கை ராம் பொத்தினேனி கொடுத்துள்ளார். தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி தமிழில் டப்பிங் பேசியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

Share this story

News Hub