மிக்ஜாம் பாதிப்பு: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கிய நடிகர் ‘சிவகார்த்திகேயன்’.

மிக்ஜாம் புயலின் கோர முகத்தால் பலர் கடுமையான சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயல் கடந்து 5நட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. அரசும், தனியார் அமைப்புகளும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிவரும் நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதற்கான காசோலையை அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது” மிக்ஜாம் புயல்,கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.… pic.twitter.com/LieFhGwO31
— Udhay (@Udhaystalin) December 10, 2023
இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.