உலகளவில் ட்ரெண்டிங் : 2வது இடத்தில் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்

lucky baskar

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகளவில் ட்ரெண்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது. நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வெளியாகி இரண்டு வாரங்களில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்தது. 


 அதைத்தொடர்ந்து ‘லக்கி பாஸ்கர்’ படம் வரும் கடந்த 28ஆம் தேதி Netflix - OTT தளத்தில் வெளியானது. ஓடிடி தளத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகளவில் ட்ரெண்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது.  
 

Share this story