'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்

‘விடாமுயற்சி” திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வர உள்ளதால் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், ராஜ் கிரண் நடித்த `பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
Neek on 21st FEB ❤️ pic.twitter.com/MSuBewyA4R
— Dhanush (@dhanushkraja) January 17, 2025
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்தப் படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ‘விடாமுயற்சி” திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வர உள்ளதால் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.