விடாமுயற்சி ரிலீஸ் எதிரொலி: 'டிராகன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்திலும் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான 'ரைஸ் ஆப் தி டிராகன்' சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் 2-வது பாடலான `வழித்துணையே' என்ற பாடலின் வீடியோ வெளியாகி வைரலானது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று டிராகன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பொங்கலை ஒட்டி அறிவிப்பு வெளியானது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, டிராகன் படக்குழு தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளனர். அதன்படி, இப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.
With all love and respect towards Ajith sir , his fans and team #vidamuyarchi we are gracefully pushing our film by a week to feb 21st ♥️ we ll use this extra one week to better our product and promote the film well ! Leaving the rest to audience 🤗 @pradeeponelife… pic.twitter.com/heBORoxrvf
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) January 18, 2025