ஐமேக்ஸ் அனுபவத்தில் பொன்னியின் செல்வன் 2... புதிய அறிவிப்பு !

ஐமேக்ஸ் அனுபவத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் அருள்மொழி தேவனை ஊமை ராணி காப்பாற்றுவது போல க்ளைமேக்ஸ் இருந்தது. இரண்டாம் பாகத்தில் ஊமை ராணியின் விரிவாக பகுதியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘பொன்னியின் செல்வன் 2’ IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.