பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி; டிக்கெட் அறிமுக விழா
1736670626428

பிரபுதேவாவின் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. இந்த நடன நிகழ்ச்சி வரும் 2025 பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது.
நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார்.ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.