"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படத்தின் "புள்ள" வீடியோ ரிலீஸ்...!

gvp

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட த்தின் "புள்ள" வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. 


நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதான், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதில் முதல் பாடலான 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடல் மட்டும் அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 'கோல்டன் ஸ்பாரோ’ பாடல் இதுவரை 16 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் "புள்ள" விடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வரிகளை தனுஷ் எழுத, ஜிவி பிரகாஷ் இந்த பாடலை பாடியுள்ளார்
 

Share this story