சமுத்திரக்கனி - யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'யாவரும் வல்லவரே'... டீசர் நாளை வெளியீடு!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள யாவரும் வல்லவரே படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இயக்குனராக ஜொலித்த சமுத்திரக்கனி தற்போது வெற்றிகரமான நடிகராக மாறியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். சமுத்திரக்கனி இயக்கம் மற்றும் நடிப்பில் கடைசியாக வெளியான வினோதய சித்தம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சமுத்திரக்கனி 'யாவரும் வல்லவரே' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிக்பாஸ் ரித்விகா சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். மேலும் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாகவும் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.