நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு... குற்றப்பத்திரிகை தாக்கல்!

நடிகர் முகேஷ்-க்கு எதிராக டிஜிட்டல் ஆதாரம் உள்ளதாகவும், முகேஷ்-க்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நடிகை அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ.வும், நடிகருமான முகேஷ் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை பிரிவும் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், முகேஷ்-க்கு எதிராக டிஜிட்டல் ஆதாரம் உள்ளதாகவும், முகேஷ்-க்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது.