கலைஞர் 100 விழாவையொட்டி இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்புகள் ரத்து

கலைஞர் 100 விழாவையொட்டி இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்புகள் ரத்து

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பிலும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர். வரும் ஜனவரி 6-ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

கலைஞர் 100 விழாவையொட்டி இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்புகள் ரத்து

இந்நிலையில், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி 4 மற்றும் 5 தேதிகளில் படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாது என  இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
 

Share this story

News Hub