'டிராகன்' படத்தில் சிம்பு பாடிய 'ஏன்டி விட்டு போன?' பாடல் வெளியானது

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் ‘ஏன்டி விட்டு போன?’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Make way for @SilambarasanTR_ in a @leon_james Musical ! 💔🎶
— AGS Entertainment (@Ags_production) January 28, 2025
‘Yendi Vittu Pona is here! ✨#YendiVittuPona OUT NOW ▶️ : https://t.co/rhyw5q1ULi@pradeeponelife in & as #Dragon
A @Dir_Ashwath Araajagam 💥🧨
A @leon_james Musical 🎵#PradeepAshwathCombo#KalpathiSAghoram… pic.twitter.com/4i2JbUTyxd
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரைஸ் ஆப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன?' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சிலம்பரசன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.