மீண்டும் காக்கிச் சட்டையில் சிவகார்த்திகேயன்?
Fri Sep 29 2023 9:36:06 AM

காக்கிச் சட்டை படத்திற்கு பிறகு மீண்டும் காவல் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், 21வது திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படம், ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகிறது.
இதைத் தொடர்ந்து, அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் அவர், காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. காக்கிச்சட்டை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.