கமலுக்காக செய்த விஷயம்... தீ விபத்தில் முடிந்தது..!

இந்தியன் 2 படம் தியேட்டர்களில் வெளியானதை முன்னிட்டு கமலஹாசனின் ரசிகர்கள் ஐந்து கிலோ கற்பூரத்தை கொளுத்தி அங்கு இருப்பவர்களை பதற வைத்துள்ளனர்.
அதாவது இந்தியன் 2 படத்தைக் கொண்டாடும் விதத்தில் ஐந்து கிலோ கற்பூரம் கொழுத்திய கமல் ரசிகர்கள், அதன் அருகில் இருந்த பேனரை கவனிக்காமல் விட்டு உள்ளார்கள்.
இதனால் குறித்த பேனரில் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அதன் பிறகு அது அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
#WATCH | புதுச்சேரி: 'இந்தியன் 2' திரைப்பட ரிலீஸை கொண்டாடும் வகையில் திரையரங்கிற்கு வெளியே 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை கொளுத்திய கமல் ரசிகர்கள்..!
— Sun News (@sunnewstamil) July 12, 2024
கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த பேனரில் பற்றும் நிலை ஏற்பட்டதால், கற்பூரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளி… pic.twitter.com/JbqOZhuKvo